முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் தொடர்பில் எழுந்த சர்ச்சையானது பொய்யென சிறீதரன் தரப்பு உறுதிபடுத்தியுள்ளது.
சமூக வலைதளப்பக்கம் ஒன்றில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கடந்த தேர்தலில் வெற்றி பெற வைக்கவே செயற்பட்டார் என கூறும் வகையில் பதிவு ஒன்று இடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பதிவில், ”முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் தொடர்பில் தமிழ் மக்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய விடயம்.
மதுபான அனுமதிப்பத்திரம்
தன்னை ஒரு முன்னாள் போராளி என மார்தட்டும் சிறீதரனின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்தது.
ரணிலிடம் மதுபான அனுமதிப்பத்திரம் பெற்று தமிழ் மக்களை ஏமாற்றிய சிறீதரனுக்கு ரணிலை ஜனாதிபதியாக்குவதே இலக்கு” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த செய்தியானது பொய்யானது என உண்மை சரிபார்ப்பவர்களால் (Fact check) உறுதிசெய்யப்பட்டுள்ளது என சிறீதரன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.