Home இலங்கை சமூகம் விளையாட்டினால் குடும்பத்தையே தள்ளிவைத்த வட்டுவாகல் கிராம பொது அமைப்பினர்

விளையாட்டினால் குடும்பத்தையே தள்ளிவைத்த வட்டுவாகல் கிராம பொது அமைப்பினர்

0

முல்லைத்தீவு வட்டுவாகல் கிராமத்தில் வளர்ந்து
வரும் கால்பந்து வீரர் சிவசுப்ரமணியம் ஜிந்துசனின் குடும்பத்தினரை, சமூகத்தில் இருந்து, கிராம மட்ட அமைப்புக்கள் ஒதுக்கிய சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட
நபர் நேற்றையதினம் (11.10.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

“முல்லைத்தீவு வட்டுவாகல் கிராமத்தில் வசித்து வருகின்றேன். ஆரம்பத்தில்
முல்லைத்தீவு உதயசூரியன் விளையாட்டு கழகத்தில் உறுப்பினராக இருந்து
விளையாடிவந்தேன். அங்கு எனக்கான சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

பின்னர், முல்லைத்தீவு சென்யூட் கழகத்தினர் அதிக ஊதியத்துடன் கூடிய விளையாட்டு
துறைக்கு என்னை அழைத்திருந்தார்கள்.

என் குடும்ப சூழ்நிலை காரணமாக நான்
அவர்களது கழகத்திற்கு மாறி செல்கின்றமை தொடர்பாக எழுத்து மூலம் கடிதம்
வழங்கியே விளையாட சென்றேன்.

அதன் பின்னர் நான் பல சவால்களுக்கு முகம்கொடுக்க
வேண்டியிருந்தது. அதனையடுத்து, கிராம மட்ட அமைப்புக்கள் எம்மை எம்
கிராமத்திலிருந்து ஒதுக்கி வைத்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

NO COMMENTS

Exit mobile version