Home இலங்கை சமூகம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட

0

மட்டக்களப்பு (Batticaloa)- வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி
பகுதியில் நேற்று காலை குளிக்கும் போது தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து
குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தும்பங்கேணி கிராமத்தை சேர்ந்த 50 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான தங்கராசா
பரமானந்தம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனை

நேற்று முன்தினம் நீர்நிலையில் வீழ்ந்து உயிரிழந்த குழந்தையின் மரண வீட்டுக்கு
சென்று விட்டு வந்து கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போதே கிணற்றுக்குள் தவறி
வீழ்ந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக பிரதேசவாசிகளின் உதவியுடன் அவர் பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு
கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.

NO COMMENTS

Exit mobile version