Home இலங்கை சமூகம் யாழ். இளவாலையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ். இளவாலையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

0

யாழ்ப்பாணம் (Jaffna) – இளவாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

நேற்றிரவு (15.12.2024) இடம்பெற்ற குறித்த விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகனான இளைஞர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் பெரியவிளான் பத்திரிமா தேவாலயத்திற்கு அருகில் வசிக்கும் 76 வயதான மோ.பாக்கியநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

குறித்த இருவரும் நேற்றிரவு 9.30 மணியளவில் பெரியவிளான், பத்திரிமா தேவாலயத்திற்கு அருகாமையில் வீதியில் நின்றபோது சேவையை முடித்துவிட்டு சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து தந்தை, மகன் ஆகிய இருவர் மீதும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை பேருந்தின் சாரதி தப்பிச் சென்ற நிலையில், பேருந்தை எடுத்துச் சென்ற இளவாலை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தவல்கள் – கஜிந்தன் 

NO COMMENTS

Exit mobile version