Home இலங்கை சமூகம் சாரயத்துடன் நஞ்சு மருந்து அருந்திய நிலையில் வவுனியாவில் குடும்பஸ்தர் மீட்பு

சாரயத்துடன் நஞ்சு மருந்து அருந்திய நிலையில் வவுனியாவில் குடும்பஸ்தர் மீட்பு

0

சாராயத்துடன் நஞ்சு மருந்து அருந்திய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர்
மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்று(1) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,  வவுனியா, சமனங்குளம் பாலத்திற்கு அருகாமையில் குடும்பஸ்தர் ஒருவர் மயக்கமடைந்த
நிலையில் கிடப்பதை அவதானித்த மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணை

இதனையடுத்து
குறித்த குடும்பஸ்தர் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் சாராயத்துடன்
வயலுக்கு பயன்படும் களை நாசினி மருந்தை கலந்து அருந்தியுள்ளதாக ஆரம்ப கட்ட
விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்தோடு,  குடும்பஸ்தர் அருகில் சாராயம், களை நாசினி என்பனவும்
மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை
மேற்கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version