Home இலங்கை குற்றம் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை

0

களுத்துறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை
செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம், களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது.

ஒருவர் கைது 

பொலொஸ்ஸகம பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை
செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/famliy-man-killed-in-kalutara-1730658267

NO COMMENTS

Exit mobile version