Home இலங்கை பொருளாதாரம் இந்திய – இலங்கை கப்பல் சேவையின் பயணக்கட்டணம் குறித்து வெளியான தகவல்

இந்திய – இலங்கை கப்பல் சேவையின் பயணக்கட்டணம் குறித்து வெளியான தகவல்

0

Courtesy: Sivaa Mayuri

தமிழ்நாட்டின் (Tamil Nadu) நாகப்பட்டினத்துக்கும் இலங்கையின் (Sri Lanka) காங்கேசன்துறைக்கும் இடையே எதிர்வரும் 15ஆம் திகதி இந்திய சுதந்திர தினம் முதல் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பயணக்கட்டணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் கப்பல் போக்குவரத்து சேவை, நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த கப்பல் சேவையை பிரதமர் மோடி காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.

சோதனை ஓட்டம் 

எனினும், விசா அனுமதி, பயணக் கட்டணம், கடல் கொந்தளிப்பு, குறைவான பயணிகள் போன்ற காரணங்களால் இந்த கப்பல் சேவை சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில், அந்தமானில் இருந்து சிவகங்கை என்ற கப்பல் வரவழைக்கப்பட்டு, இந்த கப்பலின் சோதனை ஓட்டம் நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு நேற்று நடைபெற்றது.

இந்த சிவகங்கை கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பயணி ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது 

வணிக வகுப்பில் 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சோதனை ஓட்டம்

இதில், பயணிக்க ஒருவருக்கு 7,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

அத்துடன், இந்த கப்பலில் பயணிகளுக்கு துரித உணவுகளை கட்டணத்துடன் பெற்றுக்கொள்ள உணவக வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவர் தம்முடன் 60 கிலோ வரையான பொதியை எடுத்துச் செல்லவும், 5 கிலோ வரை கைப்பையில் எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சோதனை ஓட்டம் முடிந்த பின்னர் பயணிகள் அனுமதி சீட்டுக்களை முன்பதிவுகளை செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version