Home இலங்கை அரசியல் நாளுக்கு நாள் வறுமையில் விவசாயிகள்: களத்தில் இறங்கியுள்ள அமைச்சர்

நாளுக்கு நாள் வறுமையில் விவசாயிகள்: களத்தில் இறங்கியுள்ள அமைச்சர்

0

நாட்டில் விவசாயத் திட்டங்கள் அதிக அளவில் இருந்தாலும், விவசாயிகளின் வறுமை தொடர்ந்தும் அதிகரித்தே வருவதாக விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்காந்த கூறியுள்ளார்.

உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு, விவசாயிகளின் வாழ்க்கை நிலைமையும் நீண்ட காலமாகவே மோசமடைந்து வருவதாகவும் அமைச்சர் லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளின் வாழ்வாதாரம்

இந்த நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உணவு மற்றும் விவசாய அமைப்பின் திட்டங்களை முறையாகவும் திறம்படவும் பயன்படுத்த விவசாய அமைச்சு வழிகாட்டுதலை வழங்கும் எனவும் அமைச்சர் அதன்போது உறுதியளித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க, இலங்கை உணவு மற்றும் விவசாய அமைப்பின் நிரந்தரப் பிரதிநிதி விமலேந்திர சரண் மற்றும் அமைப்பின் பிரதிநிதிகள்கலந்துகொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version