Home முக்கியச் செய்திகள் 12 வயது மகளின் முகத்தை எரித்த கொடூர தந்தை கைது

12 வயது மகளின் முகத்தை எரித்த கொடூர தந்தை கைது

0

பண்டாரவளை, லியாங்கஹவெல, அம்பதண்டேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது 12 வயது மகளின் முகத்தை தீக்குச்சியால் எரித்து கொடூரமாக சித்திரவதை செய்த தந்தை ஒருவர் சந்தேகத்தின் பேரில் இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பண்டாரவளை அம்பதண்டேகம மெதபதன பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என காவல்துறையினர்தெரிவித்தனர்.

தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதி

பண்டாரவளை அம்பதந்தேகம பிரதேசத்தின் லியங்கஹவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7ஆம் வருட பாடசாலை மாணவியின் முகம் தீக்குச்சியால் எரிக்கப்பட்ட நிலையில் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

மாணவியின் தாயார் அம்பதண்டேகம, ரொஸ்லாந்தேகம பிரதேசத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும், அவருக்கு ஆறு வயதுடைய சகோதரியொருவர் இருப்பதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.   

Source: https://ibctamil.com/article/father-arrested-for-burning-daughters-face-1724953067?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version