Home முக்கியச் செய்திகள் மகளை தவறான முறைக்கு உட்படுத்திய தந்தை இருபது வருடங்கள் பின் கைது!

மகளை தவறான முறைக்கு உட்படுத்திய தந்தை இருபது வருடங்கள் பின் கைது!

0

தனது மகளை தவறான முறைக்கு உட்படுத்தியதற்காக குற்றம் சாட்டப்பட்டு இருபது வருடங்களாக தலைமறைவாக இருந்த தந்தை ஒருவர் மொனராகலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை மெதிரிய பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபரான தந்தைக்கு எதிரான வழக்கு மொனராகலை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக் கண்டறிந்து, சந்தேக நபருக்கு இருபது வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாக கூறப்படுகிறது.

அபராதம் 

அத்தோடு, சந்தேகநபருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அபராதம் செலுத்தப்படாவிட்டால், மேலும் இருபது வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், சந்தேக நபர் பல வருடங்களாக தலைமறைவாக இருந்ததால், மொனராகலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, ஐம்பத்தாறு வயதுடைய சந்தேக நபர் மதுரட்ட பகுதியில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொனராகலை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version