Home இலங்கை சமூகம் மஸ்கெலியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை மாயம்

மஸ்கெலியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை மாயம்

0

மஸ்கெலியா (Maskeliya) பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இந்தநிலையில், கடந்த ஆறாம் திகதியிலிருந்து அவரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா பிரவுன்லோ பகுதியே சேர்ந்த வேலு
மருதமுத்து (55) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காலணிகள் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆறாம் திகதியிலிருந்து அவரை காணவில்லை என மஸ்கெலியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படுள்ளது.

இந்நிலையில் நேற்று ( 07) பிரதேச மக்கள் தேடும் பணியில் ஈடுட்டுள்ளனர்.

இதன்போது, நீர்தேக்க கரையோரத்தில் குறித்த நபர் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படும் ஆடை, தொப்பி
மற்றும் காலணிகள் கிடப்பதை கண்ட பிரதேச மக்கள் சந்தேகத்தில் மவுசாகலை நன்நீர் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.

மேலும் ஆடைகள் கிடந்த இடத்தில் EPF என்றும் மண்ணில் எழுத்தப்பட்டிருப்பது
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version