Home இலங்கை சமூகம் பண்டாரவளையில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கதி

பண்டாரவளையில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கதி

0

பண்டாரவளை (Bandarawela) பகுதியில் 12 வயது மகளை தீக்குச்சியால் முகத்தை எரித்து கொடூரமான முறையில் சித்திரவதை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பண்டாரவளை – லியங்கஹவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7ஆம் வகுப்பு பாடசாலை மாணவியின் முகம் தீக்குச்சியால் எரிக்கப்பட்ட நிலையில் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த மாணவி சமையலறை நீர் குழாய்க்கு அருகில் கைகளை கழுவிக் கொண்டிருந்த போது தந்தை மாணவியை திட்டி மிரட்டி, தீக்குச்சியால் முகத்ததை காயப்படுத்தியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தீக்காயங்களுடன் மாணவி பாடசாலை சென்ற நிலையில், சிறுமியின் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதை அவதானித்த அதிபர் இது தொடர்பில் காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டதையடுத்து, சந்தேக நபர் பண்டாரவளை நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version