தமிழ் பொது வேட்பாளருக்கு திருகோணமலை வாழ் மக்களதும் மக்கள் பிரதிநிதிகளதும் ஏகோபித்த ஆதரவினை வழங்க தீர்மானித்திருப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan)தெரிவித்துள்ளார்.
திருகோணமலை (Trinco) தமிழரசுக் கட்சி காரியாலயத்தில் இன்று (29) இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன் படி, குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனுடன் முன்னாள் பிரதேசசபை மற்றும் நகரசபை உறுப்பினர்களுக்கும் கலந்துரையாடியுள்ளனர்.
மத்திய குழுவிடம் பேச்சுவார்த்தை
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சங்குச் சின்னத்தில் போட்டியிடுகின்ற தமிழ் பொது வேட்பாளருக்கு திருகோணமலை வாழ் மக்களதும் மக்கள் பிரதிநிதிகளதும் ஏகோபித்த ஆதரவினை வழங்க தீர்மானித்திருப்பதாக குறித்த கூட்டத்தின் பின்னராக குகதாசன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக மத்திய குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் இதன்போது கருத்து வெளியிட்டனர்.