Home இலங்கை சமூகம் இறுதி கட்டத்தை நெருங்கும் ஜனாதிபதி தேர்தல்: தீவிரமாக கண்காணிக்கும் பெப்பரல் அமைப்பு

இறுதி கட்டத்தை நெருங்கும் ஜனாதிபதி தேர்தல்: தீவிரமாக கண்காணிக்கும் பெப்பரல் அமைப்பு

0

ஜனாதிபதி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முழுவதையும் தமது அமைப்பு முழுமையாக கண்காணித்து வருவதாக பெப்பரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த 54 வாக்கு எண்ணும் நிலையங்களில் கண்காணிப்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பெப்பரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

 

தேர்தல் பணிகள்

வாக்குகள் எண்ணுவதினை கண்காணிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், நிலையங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் மொபைல் கண்காணிப்பு மூலம் கண்காணிப்புகளை மேற்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறு சிறு சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும் இதுவரையில் தேர்தல் பணிகள் அமைதியாகவே இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening

Source: https://tamilwin.com/article/federal-organization-monitors-counting-of-votes-1726992855

NO COMMENTS

Exit mobile version