Courtesy: Sivaa Mayuri
வாக்களிப்பது இலங்கையர்களின் அடிப்படை உரிமையாக இருந்தாலும், வாக்காளர்களின் அக்கறையின்மை, தனிப்பட்ட அல்லது உத்தியோகபூர்வ கடமைகள், அடையாள ஆவணங்கள் இல்லாமை அல்லது வாக்காளராகப் பதிவு செய்யத் தவறியமை போன்ற காரணங்களால் பலர் நேற்றைய தினம் வாக்களிக்கவில்லை.
இலங்கையில் சராசரியாக, சுமார் 20 முதல் 25 சதவீத வாக்காளர்கள் தேர்தல் செயல்பாட்டில் உள்ள ஆர்வமின்மையால் தேர்தலில் வாக்களிக்கத் தவறி விடுகிறார்கள்.
இலங்கையின் தேர்தல் சட்டங்கள்
வாக்களிப்பதில் தவறியவர்களில், தேர்தல் நாளில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் தங்களுடைய வசிப்பிடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளில் பணிபுரியும் தனியார் துறை ஊழியர்கள் மற்றும் பணிக் கடமைகள் காரணமாக வீடு திரும்ப முடியாதவர்கள் என்பவர்கள் அடங்குகின்றனர்.
வாக்களிக்க வேண்டிய கட்டாயமான சரியான அடையாள ஆவணம் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் போனவர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.
இதன்படி, நேற்றைய தேர்தலில் சுமார் 40 இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை என்று மதிப்பி;டப்பட்டிருந்தது.
இந்தநிலையில், அமெரிக்கா அல்லது அவுஸ்திரேலியா போன்ற நாடுகளைப் போன்று இலங்கையின் தேர்தல் சட்டங்கள் பரவலான மேம்பட்ட வாக்களிப்புக்கான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை.
எனினும், கடந்த இரண்டு தசாப்தங்களாக தேர்தல் ஆணையகம், தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள், சிவில் சமூக அமைப்புகள் என்பன நிபுணர்களுடன் இணைந்து மேம்பட்ட வாக்களிப்பு முறையின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றன.