Home முக்கியச் செய்திகள் கட்டுநாயக்காவில் இன்றுமாலை தரையிறங்கிய பிரிட்டன் பெண் கைது

கட்டுநாயக்காவில் இன்றுமாலை தரையிறங்கிய பிரிட்டன் பெண் கைது

0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்றுமாலை தரையிறங்கிய பிரிட்டன் பெண் ஒருவர் சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடமிருந்து ரூ.460 மில்லியன் மதிப்புள்ள மிகப்பெரிய குஷ் போதைப்பொருளை சுங்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்துடன் இணைக்கப்பட்ட சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணை தடுத்து நிறுத்தி போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து UL 405 என்ற சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில்
குறித்த பிரிட்டிஷ் பெண் பிற்பகல் 3.45 மணியளவில் நாட்டிற்கு வந்ததாக சுங்கத்துறை செய்தித் தொடர்பாளர் மேலதிக பணிப்பாளர் ஜெனரல் சீவலி அருக்கோடா தெரிவித்தார்.

உள்ளூர் மதிப்பு ரூ.460 மில்லியன்

அதிகாரிகள் அவரது சோதனை செய்யப்பட்ட பொதிகளில் 46 கிலோ குஷ் போதைப்பொருள் இருப்பதைக் கண்டுபிடித்தனர், அதன் உள்ளூர் மதிப்பு ரூ.460 மில்லியன் ஆகும்.

புறநகர் உயர்நிலை நுகர்வோர் மத்தியில் ஒரு கிராம் பிரீமியம் குஷ் ரூ.10,000க்கு விற்கப்படுகிறது என்று சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் சட்ட நடவடிக்கைகளுக்காக, கடத்தப்பட்ட பொருட்களுடன், பெண் வெளிநாட்டு சந்தேக நபர், காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.

NO COMMENTS

Exit mobile version