கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பில் இஷாராவுக்கு உதவிய சட்டத்தரணியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து மேலதிக விசாரணை செய்வதற்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அனுமதி கிடைத்துள்ளது.
கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி, வழக்கு விசாரணையொன்றிற்காக சிறைச்சாலை அதிகாரிகளால் புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ, அந்த நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
தண்டனைச் சட்டக்கோவை
இஷார செவ்வந்தி குறித்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிக்கு துப்பாக்கியை எடுத்து சென்று வழங்கியதாக வலைவீசி தேடப்பட்டுவந்த நிலையில், எட்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த 14 ஆம் திகதி நேபாளத்தில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக வந்த இஷார செவ்வந்திக்கு, கைத்துப்பாக்கியை மறைத்து எடுத்து வருவதற்காக ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலின் பிரதியொன்றை இந்தச் சட்டத்தரணியே வழங்கியுள்ளார் எனக் குறிப்பிடப்படுகின்றது.
படுகொலை சம்பவம் தொடர்பாக குறித்த பெண் சட்டத்தரணி நேற்றைய தினம் (28) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் இஷார செவ்வந்தி தப்பிச் செல்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பலரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
You may like this
https://www.youtube.com/embed/ibxxu8f5Iyc
