அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.
இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
🛑 தேவையான பொருட்கள்
- அரிசி- 1 ஸ்பூன்
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- டீ தூள்- 1 ஸ்பூன்
- தண்ணீர்- 2 கப்
- ஷாம்பு- 1 பாக்கெட்
🛑 பயன்படுத்தும் முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி, வெந்தயம், டீ தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவைத்து எடுத்துக்கொள்ளவும்.
- பின் இதனை வடிகட்டி எடுத்து ஆறவைத்துக்கொள்ளவும்.
- அடுத்து இதில் ஷாம்பூ சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
-
இதையடுத்து இதனை எப்பொழுதும் போல தலையில் தேய்த்து குளித்துக்கொள்ளலாம்.
- இந்த ஷாம்பூவை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்தி வர முடி உதிர்வு நின்று அடர்த்தியாகவும் மற்றும் நீளமாகவும் வளரும்.
Source: https://ibctamil.com/article/fenugreek-shampoo-for-thick-hair-growth-1776903516
