Home முக்கியச் செய்திகள் விவசாயிகளின் உரமானியம் – அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

விவசாயிகளின் உரமானியம் – அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

0

உர மானியப் பணத்தை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன (Rohini Kumari Wijeratne Kaviratne) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உர மானிய பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு (Ministry of Agriculture) தெரிவித்துள்ளது.

கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக உர மானியப் பணம் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பெரும்போகத்துக்கு தேவையான உரம்

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கருத்து வெளியிடுகையில், பெரும்போகத்துக்கு தேவையான உரத்தைப் பெற 25,000 உர மானியம் அரசால் வழங்கப்படுகிறது.

இந்த உர மானியம் குறிப்பிட்ட தேதியில் வழங்கப்படும் என அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பல சந்தர்ப்பங்களில் கூறியும் இதுவரை எந்த ஒரு நபரின் வங்கிக் கணக்கிலும் பணம் வைப்பிலிடப்படவில்லை.

அம்பாறை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் விவசாயம் ஆரம்பிக்கப்பட்டு 20 நாட்கள் கடந்துள்ளன.

வெற்றிகரமான அறுவடையைப் பெற, நெல் பயிரிடப்பட்டு 14 நாட்களில் உரமிட வேண்டும். மானியம் இல்லாததால் உரங்களை வாங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர் என ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version