Home இலங்கை அரசியல் தமிழ் பொது வேட்பாளருக்கு சில எம்.பிக்களே எதிர்ப்பு : சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டு

தமிழ் பொது வேட்பாளருக்கு சில எம்.பிக்களே எதிர்ப்பு : சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டு

0

தமிழ் பொது வேட்பாளரை சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற சிலரே எதிர்க்கின்ற நிலையில் அவர்களுக்கும் பாடம் கற்பிக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தை ஆரம்பித்து வைத்து
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் ஏனைய மேல் மட்டங்கள்

மேலும் தெரிக்கையில், ”தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தமிழரசுக்கட்சியில் மிகப் பெரும்பாலானவர்கள்
ஆதரவாக இருக்கின்றாரகள்.

சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற ஒரு சிலரைத் தவிர கட்சியின் ஏனைய
மேல் மட்டங்களும் சரி, ஏனைய கட்சியின் கீழ் மட்ட தொண்டர்களும் சரி பொது
வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

அது மாத்திரமல்ல, அவர்கள் களத்தில் இறங்கி பணிபுரிவதற்கும் தயாராக
இருக்கின்றார்கள். யாழ்ப்பாணத்தில் தமிழரசுக்கட்சியினுடைய இளைஞர் அணியைச்
சேர்ந்த பலரை சந்தித்து நான் பேசியிருக்கின்றேன்.

இதனை முன்னெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.
கிளிநொச்சியைச் சேர்ந்த சிறீதரனும் பொது வேட்பாளரை வாழ்த்தியிருக்கிறார்.
ஏற்கனவே அதற்கான கூட்டங்களும் கிளிநொச்சியில் கூடப்பட்டிருக்கிறது.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை

அதேபோல தலைவராக இருக்கின்ற சேனாதிராஜாவும் இதனை வரவேற்றிருக்கின்றார். ஆகவே
தமிழரசுக் கட்சியினுடைய பெரும்பான்மையானோர் இதனை ஆதரித்து
வரவேற்றிருக்கிறார்கள்.

ஒரு சிலர் தங்களுடைய சொந்தக் காரணங்களுக்காக இவ்வாறு எதிர்க்கின்றனர்.
குறிப்பாக சொல்லப் போனால், இலங்கை அரசாங்கம் அங்கு அபிவிருத்திக்காக பணத்தை தனக்கு
கொடுத்ததாக சாணக்கியன் கூறியிருக்கின்றார்.

ஆகவே, வாங்கிய பணத்துக்கு பேச வேண்டும் என்ற நிலைக்கு அவர்கள்
தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண
வேண்டும் என அவர்கள் யோசித்தால், அதற்காக அவர்கள் சில நல்ல முடிவுகளை
எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

கடைசி நேரத்தில் அவர்கள் என்ன முடிவு எடுப்பார்களோ என்று எனக்கு தெரியாது.
நிச்சயமாக தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராக இவர்கள் முடிவு
எடுப்பார்களாக இருந்தால் அது தமிழ்த் தேசியத்துக்கு எதிரான முடிவாகத்தான்
இருக்கும்“ எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version