Home இலங்கை சமூகம் விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களக் கொடுப்பனவு: வேதநாயகன் தலைமையில் கலந்துரையாடல்

விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களக் கொடுப்பனவு: வேதநாயகன் தலைமையில் கலந்துரையாடல்

0

வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களக் கொடுப்பனவுகளை
அதிகரிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்கள் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண
ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை
(15.01.2025) இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின்
செயலாளர், விவசாயப் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரும்
கலந்துகொண்டனர்.

வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்கள் வரவுப் பதிவேட்டு இயந்திரத்தில்
கையொப்பமிடுவது தொடர்பான விவகாரம் ஆராயப்பட்டு ஆளுநரின் ஆலோசனைக்கு அமைவாக
தீர்வு காணப்பட்டது.

வெளிக்கள கடமை

மாதத்தில் 14 நாள்கள் வெளிக்கள கடமையில் ஈடுபடுவதுடன்,
பிரதி திங்கட் கிழமைகளில் வரவு பதிவேட்டு இயந்திரத்தில் கையெழுத்திட்டு
அலுவலகக் கடமைகளாற்றவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது.

அதேவேளை, விவசாயப்
போதனாசிரியர்களின் வெளிக்களப் பணிக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படவேண்டும் என்ற
கோரிக்கையை சாதகமாகப் பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர்
அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை வெளிக்கள கடமைகளைச் சரிவரச் செய்யாத உத்தியோகத்தர்களுக்கும்,
தவறிழைத்ததாகக் கண்டறியப்படும் உத்தியோகத்தர்களுக்கும் எதிராக கடுமையான
நடவடிக்கைகளை காலதாமதமின்றி மேற்கொள்ளுமாறு ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version