Home இலங்கை கல்வி கிழக்கு மாகாண ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுக்கான திகதிகள் அறிவிப்பு

கிழக்கு மாகாண ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுக்கான திகதிகள் அறிவிப்பு

0

Courtesy: H A Roshan

கிழக்கு மாகாண ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்புப் போட்டி பரீட்சைக்கான நேர்முகப்பரீட்சைகளை இந்தாண்டு ஜனவரி 16,17 மற்றும் 18ஆம் திகதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

கடந்த ஆண்டு ஓகஸ்ட் 03ஆம் திகதி அன்று கிழக்கு மாகாண ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்புப் போட்டி பரீட்சை நடைபெற்றது. 

விழிப்புணர்வு நிகழ்ச்சி

மூன்று நேர்முகப்பரீட்சை சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (15) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுக்கான திகதிகள் அறிவிப்பு | Teachers Interview Exam

இந்நிகழ்வில் பேசிய ஆளுநர், எந்தவொரு தரப்பினருக்கும் அநீதி ஏற்படாத வகையில் ஆட்சேர்ப்பு செயல்முறையை நடாத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர், ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் ஆகியோரும் இதில் பங்குபற்றினர்.

Gallery

NO COMMENTS

Exit mobile version