வலி. தென்மேற்கு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வில் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இன்றையதினம் மானிப்பாய் பிரதேச சபையின் இரண்டாவது அமர்வானது தவிசாளர் ஜெசீதன்
தலைமையில் ஆரம்பமானது.
இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் லே.ரமணன், ஜே.வி.பி காடைத்தனமான
கட்சி என கூறியமை அங்கு பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஜே.வி.பியின் விகிதாசார உறுப்பினர்
இதன்போது, உடன் எழுந்த ஜே.வி.பியின் விகிதாசார உறுப்பினரான வினோத் தனு, குறித்த
வார்த்தை பிரயோகத்திற்க்கு எதிராக கடுமையாக எதிர்பு தெரிவித்துள்ளார்.
இதன்போது சபையில்
சச்சரவு ஏற்பட்டதோடு, அமைதியின்மை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/nyezGqss0jI
