Home விளையாட்டு அர்ஜென்டீனா கால்பந்து சம்மேளனத்திற்கு பல லட்சம் அபராதம் வித்தது FIFA

அர்ஜென்டீனா கால்பந்து சம்மேளனத்திற்கு பல லட்சம் அபராதம் வித்தது FIFA

0

2026 ஆம் ஆண்டு உலக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியின் பின்னர் ஏற்பட்ட கலவரம் தொடர்பில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அர்ஜென்டீனா அணியின் முக்கிய வீர்கள் மற்றும் அந்நாட்டு கால்பந்து சம்மேளனத்திற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்பெயினுக்கு எதிரான இறுதிப் போட்டிக்குப் பின்னர் ஏற்பட்ட மோதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அர்ஜென்டீனாவின் மத்தியகள வீரர் லியான்ட்ரோ பரேடஸ் 10 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் 90,000 அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் வீரருக்கும் போட்டித்தடையும் அபராதமும்

இதே சம்பவத்தில் சிக்கிய ஸ்பெயின் வீரர் கவி 1 போட்டி தடையும், 30,000 டொலர் அபராதமும் பெற்றார்.

AFA மீது பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் மொத்தம் 321,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

FIFA சுட்டிக்காட்டிய குற்றங்கள்

அரசியல் பதாகை: அரையிறுதிக்குப் பின்னர் ‘மால்வினாஸ் தீவுகள் அர்ஜென்டீனாவுக்கே’ என்ற பதாகையை காட்சிப்படுத்தியது.

இனவெறி நடத்தை: அர்ஜென்டீனா ஆதரவாளர்களின் இனவெறி கோஷங்கள் மற்றும் அவமதிப்பு.

ஒழுங்கீனம்: அணியினரின் ஒழுக்க மீறல் மற்றும் பாதுகாப்பு விதிமீறல்கள்.

அர்ஜென்டீனா அணிக்கான தண்டனை

தண்டனையாக அர்ஜென்டீனா தனது அடுத்த 2 சொந்த மண் போட்டிகளை 50% பார்வையாளர்களுடன் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் FIFA உத்தரவிட்டுள்ளது.

மேலும் தண்டனை பெற்றவர்கள்

நஹுவேல் மோலினா அணி வீர்ர்7 போட்டிகள் தடை, $90,000 அபராதம்

ரோபர்ட்டோ அயாலா உதவி பயிற்றுநர் 3 போட்டிகள் தடை, $30,000 அபராதம்

தியாகோ அல்மாடா வீரர் 1 போட்டி தடை, $30,000 அபராதம்

உலக் கிண்ண இறுதியில் ஸ்பெயினிடம் 1-0 என அர்ஜென்டீனா தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே இந்த மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

FIFA ஒழுக்கக்கட்டுப்பாட்டுக்குழு விளையாட்டின் கண்ணியத்தை காக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. 

Source: https://ibctamil.com/article/fifa-fines-argentine-football-association-1787402907

NO COMMENTS

Exit mobile version