மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இந்த ஆண்டுக்கான இறுதிகூட்டம் அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரனின்
ஒழுங்கமைப்பில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டம் இன்றையதினம்(30.12.2024) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் நடாத்தப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் முதலாவது மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டமானது
அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர
மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.
விவசாய பிரதிநிதிகள்
மாவட்டத்தின் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட
விவசாய நஷ்ட ஈடு சம்பந்தமாகவும் பசலை வழங்குதல், டெங்கு கட்டுப்பாடு, சுகாதாரம், கல்வி, கடற்றொழில், போக்குவரத்து மற்றும் எதிர்காலத்தில் வெள்ள பாதிப்புகளை தடுத்தல்
சம்பந்தமாகவும் இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
இன்றைய இந்த கூட்டத்தின் போது மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள் அரச
திணைக்கலங்களின் உயர் அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் மாவட்ட செயலக உயர்
அதிகாரிகள் விவசாய பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.