இலங்கை(sri lanka) மற்றும் தென்னாபிரிக்க(south africa) அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாளான இன்று (5) ஆட்டம் நிறுத்தப்பட்ட போது முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 269 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
தென்னாபிரிக்க இன்னிங்ஸை தூக்கி நிறுத்திய ரியான் ரிக்கிள்டன், தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் சதத்தை பதிவு செய்து 101 ஓட்டங்கள் சேர்த்தார்.
250 பந்துகளைச் சந்தித்த ரிக்கிள்டனின் இனிங்ஸில் 11 பவுண்டரிகள் அடங்கும்.
கைகொடுத்த அணித்தலைவர்
இவரைத் தவிர, இந்தப் போட்டியில் அணித் தலைவர் டெம்பா பவுமா 78 ஓட்டங்களை பெற்றார்.
விக்கெட் வேட்டை
இன்று இலங்கை அணியின் வெற்றிகரமான பந்துவீச்சாளரான லஹிரு குமார 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதுமட்டுமின்றி அசித்த பெர்னாண்டோ 67 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், விஷ்வா பெர்னாண்டோ மற்றும் பிரபாத் ஜெயசூரிய ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.