இலங்கையில் (sri lanka)ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டை தமக்கு சாதகமாக பயன்படுத்தி மொத்த விற்பனையாளர்களை விடவும் சில்லறை விற்பனையாளர்கள் அதிக இலாபம் உழைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேங்காய்களை மொத்தமாக விற்பனை செய்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து (05) ஹட்டன் (hatton)நகருக்கு மொத்த வியாபாரிகள் குழுவொன்று வந்துள்ளது.
சில்லறை வியாபாரிகளின் வியாபார தந்திரோபாயம்
அந்த விற்பனையாளர்கள் ஒரு பெரிய தேங்காயை மொத்த விலையில் 160 ரூபாய்க்கு சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்தாலும், சில்லறை விற்பனையாளர்கள் அதிக லாபம் ஈட்டுவதற்காக ஒரு தேங்காயை 180-220 ரூபாய் வரை வெவ்வேறு சில்லறை விலையில் விற்றமை தெரிய வந்துள்ளது.
மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்யும் தேங்காய்களில் சில கெட்டுப்போவதாகவும், நஷ்டத்தை ஈடுகட்ட தேங்காய் ஒன்றுக்கு 30-40 ரூபாய் லாபம் ஈட்டுவதாகவும் சில்லறைவியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில்லறை வியாபாரிகளின் இந்த மோசடியான இலாபம் தொடர்பில் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.