Home முக்கியச் செய்திகள் யாழில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன முகாமையாளர் : காவல்துறையினர் அதிரடி

யாழில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன முகாமையாளர் : காவல்துறையினர் அதிரடி

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தனியார் நிதி நிறுவனத்தின் முகாமையாளராக கடமையாற்றும் ஒருவர் அயல் வீட்டில் உள்ள ஆசிரியரை
மண்வெட்டியால் தாக்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் கடந்த 22.03.2025 அன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் முறைப்பாடு

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குறித்த நபர் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக தாக்குதலை மேற்கொண்ட முகாமையாளருக்கு துணைபோன
தாயார் மற்றும் இரண்டு சகோதரிகள் இன்றையதினம் அச்சுவேலி காவல்துறையினரால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் தாக்குதலை மேற்கொண்ட நிதி நிறுவன முகாமையாளர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள் – பு.கஜிந்தன் 


https://www.youtube.com/embed/sP_C473ZDc8

NO COMMENTS

Exit mobile version