அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவன ஊழியர்களுக்கு ரூ. 30,000 போனஸ் வழங்க நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
வணிக கூட்டுத்தாபனங்கள் , சட்டப்பூர்வ சபைகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் அடிப்படையிலல் இந்த போனஸ்கள் வழங்கப்படவுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்
போனஸ் செலுத்தும் முறை தொடர்பிலான சுற்றறிக்கையை நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 2024 நிதியாண்டில் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் மற்றும் வரிக்குப் பிந்திய இலாபத்தில் குறைந்தபட்சம் 30% ஐ ஒருங்கிணைந்த நிதிக்கு உதவித் தொகை அல்லது வரிகளாக செலுத்திய நிறுவன ஊழியர்களுக்கு ரூ. 30,000 போனஸ் வழங்கப்படும்.
2024 நிதியாண்டில் இலாபம் ஈட்டிய,ஆனால் வரிக்குப் பிந்தைய இலாபத்தில் 30% க்கும் குறைவாக ஒருங்கிணைந்த நிதிக்கு செலுத்திய நிறுவனத்தின் ஊழியர்களுக்கும்
ரூ. 25,000 போனஸ் வழங்கப்படும்.
கூட்டு ஒப்பந்தங்கள் அல்லது இதே போன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கீழ் சம்பளம்/பயன்களை செலுத்தும் நிறுவனங்களுக்கு இந்த சுற்றறிக்கை பொருந்தாது.
