Home சினிமா வாழ்க்கையே கண் முன் வந்து போனது.. ஜெயிலர் 2 ஆடிய கவர்ச்சி பாலிவுட் நடிகைக்கு கார்...

வாழ்க்கையே கண் முன் வந்து போனது.. ஜெயிலர் 2 ஆடிய கவர்ச்சி பாலிவுட் நடிகைக்கு கார் விபத்து

0

பாகுபலி படத்தில் வரும் மனோகரி பாடலில் டான்ஸ் ஆடி பிரபலம் ஆனவர் நோரா படேஹி. அவர் தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி எல்லோரையும் கவர்ந்து வருகிறார்.

தற்போது ரஜினியின் ஜெயிலர் 2 படத்திலும் அவர் ஒரு கவர்ச்சி பாடலுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார்.

விபத்து

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நோரா படேஹி பயணம் செய்த கார் மும்பையில் விபத்தில் சிக்கியது. அவரது காரை குடிபோதையில் ஒருவர் வந்து மோத விபத்து ஏற்பட்டது. அந்த நபரை போலீசார் தற்போது கைது செய்து இருக்கின்றனர்.

விபத்து பற்றி பதிவிட்ட நோரா, “நான் நலமாக தான் இருக்கிறேன். அந்த நபர் மோதியபோது என் காரில் மோசமாக பாதிக்கப்பட்டது. என் தலையை ஜன்னலில் மோதிக்கொண்டேன்” என அவர் கூறி இருக்கிறார்.

“என் கண் முன் வாழ்க்கையையோ வந்து போனது. அது யாருக்கும் நடக்கக்கூடாது என நினைக்கிறேன்” என நோரா பதிவிட்டு இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version