Home இலங்கை அரசியல் தொடருந்து பயணச்சீட்டு கட்டணத்தை மீளப்பெறும் வசதி தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

தொடருந்து பயணச்சீட்டு கட்டணத்தை மீளப்பெறும் வசதி தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

0

கொழும்பை தவிர ஏனைய மாவட்டங்களிலும் தொடருந்து பயணச்சீட்டு கட்டணத்தை மீளப்பெறும் வசதிகள் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 25ஆம் திகதி முதல் இந்த புதிய வசதி நடைமுறைக்கு வரவுள்ளது. 

வசதி கிடைக்கப்போகும் புகையிரத நிலையங்கள்

இதுவரையில் தொடருந்து பயணச்சீட்டுகளுக்கான கட்டணத்தை மீளப் பெறும் வசதி கொழும்பு கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்களில் மட்டுமே செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், டிசம்பர் 25 முதல் பதுளை, எல்ல, பண்டாரவளை, ஹப்புத்தளை, நானுஓயா மற்றும் ஹட்டன் ஆகிய இடங்களில் குறித்த வசதி கிடைக்கும்.

அத்துடன் அநுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும் சோதனை அடிப்படையில் பணத்தைத் மீளப் பெறும் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்.

மேலும் ஜனவரி முதல் கண்டி தொடருந்து நிலையத்திலும் குறித்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version