Home இலங்கை அரசியல் தேர்தல் பணியாளர்களுக்காக ஆணையாளர் விடுத்த கோரிக்கை நிராகரித்த நிதியமைச்சு

தேர்தல் பணியாளர்களுக்காக ஆணையாளர் விடுத்த கோரிக்கை நிராகரித்த நிதியமைச்சு

0

Courtesy: Sivaa Mayuri

தேர்தல் பணிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்படும் பொதுத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் பிற கொடுப்பனவுகளில் இருந்து முன்கூட்டிய தனிநபர் வருமான வரிக்கு(APIT) விலக்கு வேண்டும் என்ற தேர்தல் ஆணையகத்தின் கோரிக்கையை நிதி அமைச்சு நிராகரித்துள்ளது.

இந்த வரி விலக்கைக் கோரி தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க, நிதி அமைச்சின் செயலாளருக்கு ஒகஸ்ட் 13ஆம் திகதி கடிதம் எழுதியிருந்தார்.

எனினும் இது சட்டத்திற்கு எதிரானது என்பதால், அத்தகைய விலக்குகளை வழங்க முடியாது என்று திறைசேரியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வரி விலக்கு

குறிப்பிட்டவர்களை தேர்ந்தெடுத்து வரி விலக்குகளை வழங்கினால், அது நியாயமற்றது மற்றும் வரி செலுத்தும் மற்றவர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

தேர்தல் கடமையில் உள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் இருந்து “முன்கூட்டிய தனிநபர் வருமான வரி”கழிக்கப்பட்டவுடன், அவர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் தொகை குறைவாக இருக்கும் என்பதால்,திறமையான அதிகாரிகளை பணியமர்த்துவது கடினம் என்று தேர்தல்கள் ஆணையாளர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் எதிர்வரும் ஏனைய தேர்தல்களுக்கு பெருமளவிலான அரச அதிகாரிகளின் சேவைகள் தேவைப்படும் நிலையிலேயே இந்த கோரிக்கையை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

NO COMMENTS

Exit mobile version