Home இலங்கை சமூகம் பொதுமக்களுக்கு தபால் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

பொதுமக்களுக்கு தபால் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

0

குறுஞ்செய்தியினூடாக பொதுமக்களை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் நிதி மோசடி தொடர்பாக இலங்கையின் தபால் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி,தபால் திணைக்களத்தினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொதிகள் தொடர்பில் எவ்வித குறுஞ்செய்திகளும் அனுப்பி வைக்கப்பட மாட்டாது  என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  போலி இணையதளமொன்றின் ஊடாகவும் குறுஞ்செய்தி ஊடாகவும் பொதிகள் குறித்து பொதுமக்களிடம் அறிவித்து பணம் பறிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் உறுதி நிலையை அடைந்துள்ளது : செஹான் சேமசிங்க

போலி குறுஞ்செய்தி

தபால் திணைக்களம் திணைக்கள அதிகாரபூர்வ இணைய தளத்தைப் போன்று போலி இணைய தளமொன்று உருவாக்கப்பட்டு, நபர்களின் தனிப்பட்ட விபரங்கள் திரட்டப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தபால் பொதிகள் குறித்து அறிவிக்கும் போது வங்கி அட்டை விபரங்களை வழங்கத் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது வேட்பாளராகக் களமிறங்குவாரா விஜயதாஸ..! முடிவுக்காக காத்திருக்கும் மகா சங்கத்தினர்

தொலைபேசி இலக்கங்கள்

தபால் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு இவ்வாறான சந்தர்ப்பங்களில் உண்மையை அறிந்து கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு 0112542104, 0112 334728, 0112335978, 0112687229, 0112330072 என்ற எண்களின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோட்டாவின் காரை பயன்படுத்தும் பியூமி: அம்பலமாகவுள்ள உண்மைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version