Home இலங்கை சமூகம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நிதி செயற்பாட்டு மீளாய்வு கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நிதி செயற்பாட்டு மீளாய்வு கூட்டம்

0

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டுக்கான நிதி
செயற்பாட்டு முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(16.10.2024) குறித்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் கருத்துத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர்,

பொதுத் தேர்தல் 

“இவ் வருடம் அதிகமான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இரண்டு
தேர்தல்களில் ஒன்று நடைபெற்றுள்ளது. பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

மேலும்
வருட இறுதி நெருங்கிக் கொண்டிருப்பதனால் குறிப்பிட்ட காலத்தினுள் திட்டங்களை
பூரணப்படுத்தி, கொடுப்பனவுகளை உரிய காலத்தினுள் வினைத்திறனான முறையில் வழங்கி
முடிக்க வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார்.

கிளிநொச்சி மாவட்ட செயலக கணக்குக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்
கலந்துரையாடலில், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் க.சி கஜேந்திரன் மாவட்டத்தின் நிதி விடயம் சம்பந்தமாக விளக்கமளித்தார்.

நிதி செலவீனம்

தொடர்ந்து மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்த
திணைக்களங்களினது நிதி செலவீன தலைப்புக்களின் கீழ் கிடைக்கப்பெற்ற
ஒதுக்கீடுகள் அவற்றின் நிதி செயற்பாட்டு தற்போதைய நிலைகள் தொடர்பாக விரிவாக
ஆராயப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச
செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், திணைக்களங்களின்
மாவட்ட இணைப்பாளர்கள், விடயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக
கணக்குக் கிளை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version