Home இலங்கை அரசியல் நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரசாரப் பணிகள் ஆரம்பம்

நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரசாரப் பணிகள் ஆரம்பம்

0

இலங்கையின் பொதுத் தேர்தலில் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் யானைச் சின்னத்தில்
போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பிரசாரப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

நுவரெலியாவில் இன்றைய தினம்
(16.10.2024) ஆலய வழிபாடுகளுடன் குறித்த பிரசார பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
மருதபாண்டி ராமேஷ்வரனின் (M. Rameshwaran)தலைமையில் கட்சியின் பிரசார பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மக்கள் சந்திப்பும் கூட்டமும்

கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தில்
பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதை தொடர்ந்து, மக்கள் சந்திப்பும் கூட்டமும்
இடம்பெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும் (அரசியல்
பிரிவு) கொட்டகலை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ராஜமணி பிரசாத்,
முன்னாள் உப தவிசாளர், உறுப்பினர்கள், அரசியல் அமைப்பாளர்கள், ஆலய பரிபாலன
சபையினர், வர்த்தகர்கள், பொது மக்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களாக கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன்
தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன், தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல்
ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை யானை சின்னத்தில் களமிறங்கியுள்ளமை குறிப்பிடதக்கது.

NO COMMENTS

Exit mobile version