Home முக்கியச் செய்திகள் அரிசி விற்பனையில் மோசடி : வர்த்தகருக்கு விதிக்கப்பட்ட அபராதம்

அரிசி விற்பனையில் மோசடி : வர்த்தகருக்கு விதிக்கப்பட்ட அபராதம்

0

நாட்டில் தற்போதைய அனர்த்த காலத்திலும் கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்றமை மற்றும் ‘லங்கா பாஸ்மதி’ எனப் போலியான பெயரில் பற்றுச்சீட்டுகளை வெளியிட்ட வர்த்தகருக்கு இலட்சம் ரூபா அபராதத்தை விதித்துள்ளது நீதிமன்றம்.

மாத்தளை, நாலந்த பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு எதிராகவே நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.

வர்த்தக நிலையத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல்

 அந்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் மேற்கொள்ள நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்தது.

குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக நாவுல நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து சம்பந்தப்பட்ட வர்த்தகருக்கு 110,000 ரூபா அபராதம் விதிக்குமாறு நீதவான் இன்று (16) உத்தரவிட்டார்.

NO COMMENTS

Exit mobile version