Home இலங்கை சமூகம் கொழும்பிலுள்ள பிரபல கட்டடத் தொகுதியில் தீ விபத்து

கொழும்பிலுள்ள பிரபல கட்டடத் தொகுதியில் தீ விபத்து

0

கொழும்பிலுள்ள கிரிஷ் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் கட்டடத்தின் 60ஆவது மாடியில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தீயை அணைக்கும் தீவிர முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நிதி முறைகேடு

தற்போது வரையில் 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தீ விபத்து ஏற்பட்டுள்ள கிரிஷ் டிரான்ஸ்வேர்ல்ட் சதுக்கத்தில் உள்ள நிலத்தின் குத்தகை பரிவர்த்தனையில் சுமார் 70 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடு நடந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த ஜனவரி 28 ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version