Home இலங்கை சமூகம் வவுனியாவில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து!

வவுனியாவில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து!

0

வவுனியாவில் (Vavuniya) உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ விபத்து இன்று (24) வவுனியா-மரக்காரம்பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து

குறித்த தீ விபத்தில் தொழிற்சாலையின் பெரும்பாலான பகுதி தீக்கிரையாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தீயினை கட்டுப்படுத்த நகரசபை தீயணைப்பு பிரிவினர், மற்றும் பொதுமக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://www.dailymotion.com/embed/video/x90uqrk

Source: https://ibctamil.com/article/fire-broke-out-plastic-factory-in-vavuniya-1719228595

NO COMMENTS

Exit mobile version