Home இலங்கை அரசியல் அநுர அரசினால் கைநழுவிய வரலாற்று வாய்ப்பு

அநுர அரசினால் கைநழுவிய வரலாற்று வாய்ப்பு

0

இலங்கையின் 10ஆவது நாடாளுமன்ற சபாநாயகராக அசோக சபுமல் ரங்வல்ல நியமிக்கப்பட்டுள்ளதுடன், பிரதி சபாநாயகராக முஹம்மத் ரிஸ்வி சாலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் அரசியல் வரலாற்றில் பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் ஒருவரை நியமிப்பதற்கான வாய்ப்பு இம்முறையும் இல்லாது போயுள்ளது.

10 ஆவது நாடாளுமன்றின் முதல் அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமானது.

சபாநாயகர் தெரிவு

நாடாளுமன்ற செயலாளரின் அறிவிப்பின் பிரகாரம் சபாநாயகர் தெரிவு இடம்பெற்றதுடன், பிரதமரால் அதற்கான முன்மொழிவும் இடம்பெற்றது.

இது அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் 4, 5 மற்றும் 6 ஆகியவற்றின் விதிகளின்படி நடைபெற்றது.

பிரதமர் ஹரினி அமரசூரிய, கலாநிதி
அசோக சபுமல் ரங்வல நியமனத்தை முன்மொழிந்தார் மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் இந்த முன்மொழிவை உறுதிப்படுத்தினார்.

முதலாவது அரசுப் பேரவையின் தலைவர்

இலங்கையின் வரலாற்றில் முதலாவது அரசுப் பேரவையின் தலைவராக  ஃபன்சிஸ் மொலமுரே தெரிவுசெய்யப்பட்டார்.

அதன் பின்னரான அரசுப் பேரவையின் தலைவராக எஃப். ஏ ஒபேசேகர நியமிக்கப்பட்டார்.

நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை

அதனைதொடர்ந்து அரசுப் பேரவையானது பிரதிநிதிகள் சபையாக மாற்றப்பட்டு நாடாளுமன்ற முறை இலங்கையில் கொண்டுவரப்பட்டது.

இதன்படி இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், முதலாவது நாடாளுமன்ற சபாநாயகராக  ஃபன்சிஸ் மொலமுரே தெரிவுசெய்யப்பட்டார்.

இவர், 14 ஒக்டொபர் 1947 தொடக்கம்  25 ஜனவரி 1951 வரை சபாநாயகராக செயற்பட்டார்.

பிரான்சிஸ் மொலமுறேயின் இறப்பினையடுத்து சேர் அல்பேட் எஃப் பீரிஸ் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்(13 பெப்ரவரி 1951 – 08 ஏப்ரல் 1952)

இதன்பின்னர், இரண்டாவது,  நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் தலைவராக மீண்டும் அல்பேட் எஃப் பீரிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.(09 ஜூன் 1952 – 18 பெப்ரவரி 1956)

இதனை தொடர்ந்து, மூன்றாவது நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவராக எச். எஸ். இஸ்மாயில், தெரிவுசெய்யப்பட்டார் (19 ஏப்ரல் 1956 – 05 டிசம்பர் 1959)

நான்காவது நாடாளுமன்றம் பிரதிநிதிகள் சபை ரி. பீ. சுபசிங்க பதவியேற்றார். (30 மார்ச் 1960 – 23 ஏப்ரில் 1960)

ஐந்தாவது நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவராக ஆர். எஸ். பெல்பொல பதவியேற்றார்.(05 ஆகஸ்ட் 1960 – 24 ஜனவரி 1964)

தொடர்ந்து, பெல்பொலவின் பதவி விலகலை ஹியூ. பர்னாந்து சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்( 24 ஜனவரி 1964 – 17 டிசம்பர் 1964)

மேலும். ஆறாவது நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவராக அல்பேட் எஃப் பீரிஸ் தெரிவு செய்யப்பட்டார்(05 ஏப்ரில் 1965 – 21 செப்டெம்பர் 1967)

மேலும், அல்பேட் பீரிஸின் இறப்பையடுத்து சபாநாயகராகத் சேர்லி கொரயா தெரிவு செய்யப்பட்டார் (27 செப்டெம்பர் 1967 – 25 மார்ச் 1970

ஏழாவது நாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவராக ஸ்ரான்லி திலகரத்ன தெரிவானார்.(07 ஜூன் 1970 – 22 மே 1972)

தேசிய அரசப் பேரவை

இதனை தொடர்ந்து இலங்கை அரசியல் அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்ளுக்கு அமைவாக நாளுமன்றம் பிரதிநிதிகள் சபையானது, தேசிய அரசப் பேரவையாக மாற்றம் பெற்றது.

இதன்படி அதன் முதல் தலைவராக(சபாநாயகர்)  ஸ்ரான்லி திலகரத்ன தெரிவுசெய்யப்பட்டார். (07 ஜூன் 1970 – 22 மே 1972)

மேலும், இரண்டாவது தேசிய அரசப் பேரவையின் சபாநாயகராக  கலாநிதி ஆனந்த திஸ்ஸ த அல்விஸ் தெரிவானார்(07 செப்டெம்பர் 1978 – 13 செப்டெம்பர் 1978)

இதனை தொடர்ந்தே 1977ஆம் ஆண்டு இலங்கையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் மாற்றத்தின் பிரகாரம், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முதலாவது நாடாளுமன்றம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

ஜனநாயக சோசலிச குடியரசின் நாடாளுமன்றம்

இதன்படி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முதலாவது நாடாளுமன்ற சபாநாயகராக கலாநிதி ஆனந்த திஸ்ஸ த அல்விஸ் தெரிவானர்(07 செப்டெம்பர் 1978 – 13 செப்டெம்பர் 1978)

இதன்பின்னர், ஆனந்த திஸ்ஸ த அல்விஸின் பதவி விலகலை தொடர்ந்து, எம். ஏ. பாக்கீர் மாக்கர் சபாநாயகராக தெரிவானர்.(21 செப்டெம்பர் 1978 – 30 ஆகஸ்ட் 1983)

தொடர்ந்து, பாக்கீர் மாக்காரின் பதவி விலகலை தொடர்ந்து, சேனாநாயக்க சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்( 06 செப்டெம்பர் 1983 – 20 டிசம்பர் 1988)

இதன்படி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சபாநாயகர்களாக பின்வருவோர் பதவி வகித்துள்ளனர்.

இரண்டாவது நாடாளுமன்ற சபாநாயகராக எம். எச். மொஹமட் (09 மார்ச் 1989 – 24 ஜூன் 1994)

மூன்றாவது நாடாளுமன்ற சபாநாயகராக கே. பீ. ரத்நாயக்க (தேசிய பட்டியல்) தெரிவு செய்யப்பட்டார் (25 ஆகஸ்ட் 1994 – 18 ஆகஸ்ட் 2000) (14 செப்டெம்பர் 2000 – 10 ஒக்டோபர் 2000

நான்காவது நாடாளுமன்ற சபாநாயகராக அநுர பண்டாரநாயக்க தெரிவு செய்யப்பட்டார்(8 ஒக்டோபர் 2000 – 10 ஒக்டோபர் 2001) இவர் சபாநாயகர் பதவிக்கு ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்ட ஓர் எதிர்க்கட்சி உறுப்பினராவார்.

சபாநாயகராகர் தெரிவு

ஐந்தாவது நாடாளுமன்ற சபாநாயகராக ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவு செய்யப்பட்டார்( (19 டிசம்பர் 2001 – 07 பெப்ரவரி 2004)

ஆறாவது நாடாளுமன்ற சபாநாயகராக டப்ள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தெரிவு செய்யப்பட்டார்.( 22 ஏப்ரல் 2004 – 09 பெப்ரவரி 2010)

(ஐக்கிய தேசிய முன்னணியைச் சார்ந்த எதிர்க்கட்சி வேட்பாளரான டப்ள்யூ. ஜே. எம். லொக்குபண்டார, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளரான டி. யூ. டப்ளியூ. குணசேக்கர பெற்ற 109 வாக்குகளுக்கெதிரான 110 வாக்குகளைப் பெற்று சபாநாயகர் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.(நாடாளுமன்ற வாக்கெடுப்பு)

ஏழாவது நாடாளுமன்ற சபாநாயகராக சமல் ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டார். (22 ஏப்ரில் 2010 – 26 ஜுன் 2015)

எட்டாவது நாடாளுமன்ற சபாநாயகராக கரு ஜயசூரிய (தேசிய பட்டியல்) தெரிவு செய்யப்பட்டார்.( செப்டெம்பர் 2015 – 02 மார்ச் 2020)

ஒன்பதாவது நாடாளுமன்ற சபாநாயகராக மகிந்த யாப்பா அபேவர்தனதெரிவு செய்யப்பட்டார்(2020 – 2024)

தற்போது, 10ஆவது நாடாளுமன்ற சபாநாயகராக அசோக சபுமல் ரங்வல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version