இலங்கையின் 10வது நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் சற்று முன்னர் (21.11.2024) ஆரம்பமாகியுள்ளது.
இதன்படி, இன்று முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்றம் கூடியுள்ளது.
நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளதுடன் பிரதமர் ஹரிணி அமரசூரியவும் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார்.
கொள்கை பிரகடனம்
இன்றைய தினம் சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.
இதன்படி இன்று முற்பகல் 11.30 அளவில் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
https://www.youtube.com/embed/M74sFiiLjzk