Home இலங்கை குற்றம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் விடுதலை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் விடுதலை

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி சிறையில் அடைக்கப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவின் (Ram Mohan Naidu) முயற்சியைத் தொடர்ந்து, அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

3 – 4 மாதங்களாக இலங்கை சிறையில் அடைப்பு

சட்ட நடைமுறைகள் முடிந்து கடற்றொழிலாளர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்செயலாக இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து கடந்த 3 – 4 மாதங்களாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேரே விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று நாயுடுவின் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024, ஜூன்  25 அன்று அவர்கள் இருவரும் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

NO COMMENTS

Exit mobile version