Home இலங்கை சமூகம் கடலில் மிதந்து வந்த மர்ம திரவத்தை குடித்த கடற்றொழிலாளர்கள் : பலி எண்ணிக்கை 5 ஆக...

கடலில் மிதந்து வந்த மர்ம திரவத்தை குடித்த கடற்றொழிலாளர்கள் : பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

0

புதிய இணைப்பு 

கடலில் மிதந்த போத்தலில் இருந்து மதுபானம் என நினைத்து விஷ திரவத்தை அருந்திய “டெவன் 5” நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த 6 கடற்றொழிலாளர்களில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி உயிரிழந்த கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.  

இரண்டாம் இணைப்பு 

தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 6 கடற்றொழிலாளர்களில் 3 பேர் மது என நினைத்து விஷ திரவத்தை குடித்ததால் உயிரிழந்துள்ளனர்.

முதலாம் இணைப்பு

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை மதுபானம் என நினைத்து குடித்த இரண்டு கடற்றொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவமானது, தென் கடல் பகுதியில் நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளது

தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட “டெவோன்” என்ற பல்நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்த 06 கடற்றொழிலாளர்களே இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நால்வர் கவலைக்கிடம்

இந்த நிலையில், சம்பவத்தில் இரண்டு உயிரிழந்துள்ளதுடன் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், 06 மீனவர்களும் சுகயீனமடைந்துள்ளதாகவும், இது தொடர்பில் தொலைதூரத்திற்கு செய்தி அனுப்பும் இயந்திரங்கள் ஊடாக அறிவித்ததாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version