Home இலங்கை சமூகம் யாழில் காணாமல்போயுள்ள இரு கடற்தொழிலாளர்களை தேடும் நடவடிக்கை முன்னெடுப்பு

யாழில் காணாமல்போயுள்ள இரு கடற்தொழிலாளர்களை தேடும் நடவடிக்கை முன்னெடுப்பு

0

கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ள யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த
இரு கடற்தொழிலாளர்களையும் தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த கடற்தொழிலாளர்கள் காணாமல்போயுள்ள விடயம் தொடர்பில் கடற்தொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தேடுதல் நடவடிக்கை

இதனையடுத்து அவர் உடனடியாக கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள
பிரதானிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், கடற்தொழிலாளர்களை தேடும் நடவடிக்கையை உடன் ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய
தேடுதல் இடம்பெற்று வருகின்றது.

46 வயதுடைய விமலேந்திரன் ஞானராஜ், 54 வயதுடைய பூலோகதாசன் ஆகியோரே கடந்த 15ஆம்
திகதி ஊர்காவற்துறையிலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில்
காணாமல்போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version