Home இலங்கை பொருளாதாரம் சிறுபோக விவசாயிகளுக்கு உர மானியங்கள் வழங்க நடவடிக்கை

சிறுபோக விவசாயிகளுக்கு உர மானியங்கள் வழங்க நடவடிக்கை

0

2025ஆம் ஆண்டில் சிறுபோகத்திற்காக நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவை கவனத்தில் கொண்டெ இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

ஏக்கருக்கான அதிகபட்ச பணம்.. 

அந்தவகையில், 2025ஆம் ஆண்டு சிறுபோக பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கும், நெல் நிலங்களில் பிற பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கும் உர மானியங்களை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதற்கமைய, இந்த ஆண்டு சிறுபோக காலத்தில் நெல் வயல்களில் நெல் சாகுபடி செய்வதற்கு ஏக்கருக்கு 25,000 ரூபாய் வீதம் அதிகபட்சமாக வழங்கப்படும்.

மேலும், பருவகால கூட்டங்களின் போது தீர்மானிக்கப்பட்டபடி, நெல் நிலங்களில் பிற வயல் பயிர்களை பயிரிடுவதற்கு அதிகபட்சமாக 02 ஏக்கருக்கு 15,000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version