Home உலகம் வெளிடொன்றில் விபத்தில் சிக்கிய உலங்குவானூர்திகள்: பலியான உயிர்கள்!

வெளிடொன்றில் விபத்தில் சிக்கிய உலங்குவானூர்திகள்: பலியான உயிர்கள்!

0

தென்மேற்கு பின்லாந்து நகரமான கௌடுவாவில் இரண்டு உலங்குவானூர்திகள் விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டின் யூரா விமான நிலையத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இரண்டு உலங்குவானூர்திகள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்துக்குள்ளான இரண்டு உலங்குவானூர்திகளில் ஒன்று எஸ்டோனியாவிலும் மற்றொன்று ஆஸ்திரியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சில தொழிலதிபர்கள் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விசாரணை

இந்த நிலையில், விபத்து குறித்து அந்நாட்டு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version