Home முக்கியச் செய்திகள் கெஹெலியவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

கெஹெலியவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

0

புதிய இணைப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் ஜூன் மாதம் 03 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (20) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த நீதவான் இந்த வழக்கின், மற்றுமொரு சந்தேக நபராக கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனான ரமித் ரம்புக்வெல்லவின் பெயரை குறிப்பிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

கெஹெலிய ரம்புக்வெல்ல ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக கடந்த 07ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய போது ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முதலாம் இணைப்பு 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella), சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று (20) கொழும்பு பிரதான நீதவான் தனூஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

“ஊழல்” குற்றச்சாட்டின் கீழ் மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version