Home இலங்கை அரசியல் நாட்டில் நிலவும் அரிசி, உப்பு தட்டுப்பாடு: அமைச்சர் விளக்கம்

நாட்டில் நிலவும் அரிசி, உப்பு தட்டுப்பாடு: அமைச்சர் விளக்கம்

0

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் அரிசி, உப்பு போன்ற பொருட்களுக்கான தட்டுப்பாட்டுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பு கிடையாது என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கிரிசாந்த அபேசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு இன்னமும் ஒரு மாதமே முடிவடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அடுத்த ஆண்டில் உப்பு அல்லது அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதற்கான பொறுப்பினை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து

நிகழ்வு ஒன்றின் நிறைவில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது, அமைச்சர் அபேசிங்க இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version