Home இலங்கை அரசியல் தேர்தலை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

தேர்தலை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

0

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று (29) காலை தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமைப் பார்வையாளராக நாச்சோ சான்செஸ் அமோர்( Nacho Sánchez Amor) என்பவர் உள்ளார்.

இவர் ஸ்பெயினை(spain) பிரதிநிதித்துவப்படுத்தி ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

10 முக்கிய பார்வையாளர்கள் 

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவில் 10 முக்கிய பார்வையாளர்கள் உள்ளனர். மேலும், நாடு முழுவதும் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் 26 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்று (29) கொழும்பு ஹில்டன் ஹோட்டல் வளாகத்தில் தமது கடமைகளை ஆரம்பித்த போது, ​​ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாச்சோ சான்செஸ் அமோர் தமது செயற்பாடுகள் குறித்து சுருக்கமான விளக்கமொன்றை அளித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள்

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை அவதானிக்க இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்று தானும் தனது கண்காணிப்புக் குழுவும் இலங்கைக்கு வந்ததாகவும், இலங்கையில் தேர்தலை அவதானிக்க ஏழாவது தடவையாக வருகை தந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் எனவும் சன்செஸ் அமோர் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version