Home இலங்கை சமூகம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்: எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்: எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்

0

வீட்டு வேலை அல்லாத தொழில்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அந்த நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை அங்கிகரீப்பதை கட்டாயமாக்குவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது. 

வீட்டு வேலை அல்லாத தனிப்பட்ட துறை வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தூதரகங்கள் 

இலங்கைத் தூதரகங்கள் இல்லாத நாடுகளில் வேலைவாய்ப்புக்கான பொருத்தமான வேலைவாய்ப்பு ஒப்பந்தம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைமை அலுவலகம், விமான நிலையப் பிரிவு அல்லது மாவட்ட அலுவலகங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பணியகம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி முதல், அனைத்து வீட்டு வேலைகள் அல்லாத வேலைகளுக்கும் தனிப்பட்ட தொழில் அடிப்படையில் வெளிநாடு செல்லும்போது, பணியகப் பதிவைப் பெறுவதற்கு தொடர்புடைய வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை அங்கிகரிப்பது கட்டாயமாகும் என்று அந்த பணியகத்தின் தலைவர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இது பணியகப் பதிவைப் பெறுவதற்கு ஒரு முன்நிபந்தனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 you may like this


https://www.youtube.com/embed/qv79X_t_7XQ

NO COMMENTS

Exit mobile version