Home இலங்கை குற்றம் சுங்க வாகனத்தில் சிக்கிய வெளிநாட்டு மதுபானங்கள்: சாரதி வாக்குமூலம் பதிவு

சுங்க வாகனத்தில் சிக்கிய வெளிநாட்டு மதுபானங்கள்: சாரதி வாக்குமூலம் பதிவு

0

துறைமுக பாதுகாப்பு பிரிவினர் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களை இன்று (18) கைப்பற்றியுள்ளனர்.

சுங்க திணைக்களத்திற்கு சொந்தமான கெப் வண்டியொன்றில் இருந்து மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த வண்டியில் இருந்த 158 வெளிநாட்டு மதுபான போத்தல்களை துறைமுக பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

சாரதியிடம் வாக்குமூலம் பதிவு

துறைமுக இலக்கம் 2 எல்.பி வாயிலில் இருந்து மதுபானத்தை வெளியே எடுக்க முயற்சித்த போது சிக்கியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து வாகன சாரதியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Source: https://tamilwin.com/article/foreign-liquor-caught-in-customs-vehicle-1723994854

NO COMMENTS

Exit mobile version